Tuesday, 14 September 2010

நிலவு பூமி

கருப்பையா அம்பலம் கோயில் கணக்கை பார்த்து கொண்டிருந்தார். அவரது மகன் பாண்டி போட்டக் கணக்கு கடுமையாக இருந்தது. 

" ஏண்டா.. அறிவு கெட்டவனே! இப்படியாடா கணக்கு போடுறது? எப்படியாது ஒரு பத்தாயிரத்தை கணக்குல சேர்த்து எடுக்கலாம்னு பாத்தா முடியவே முடியலையே!! "

" என்ன பிரச்சனை உங்களுக்கு இப்போ ? அந்த காசு எதுக்கு இப்போ ? கிடைக்குற சம்பளம் போதும் " என்றான் பாண்டி.

" நீயெல்லாம் எப்படி பொழைக்கப் போறியோ ?" என்று மண்டையப் போட்டு உருட்டிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்க ஊராட்சி ஒன்றிய தலைவர் சீருந்திலே வந்தார் . வந்து கீழே கூட இறங்காமல் இரண்டு பேரையும் வண்டியில் ஏறச் சொல்லி அவர் தோட்டத்திற்கு அழைத்து சென்றார். 

" கருப்பையா கோயில் கணக்குல உண்டியல் பணத்தை எண்ணும் பொழுது ஒரு 2 இலட்சம் ரூபாய நம்ம பய எடுத்துட்டான். "

" என்னங்க சொல்றீங்க. நம்ம கணக்கா பாத்த பெரிய பிரச்னை வந்துருமே! "

"அதான் தெரியும் யா. அதுக்கு தானா உன்னை கூட்டிட்டு வந்தேன். நீ என்ன பண்றனா இத செய்தது நீதான்னு ஒத்துக்க. அபராதம் கட்டிரலாம். ஐம்பதாயிரம் தறேன். என்ன சொல்ற "

அப்போ பாண்டி சொன்னான் "அட... கவலைய விடுங்க... எங்க அப்பா பொழைக்க தெரிஞ்சவரு... ஊர்ல எல்லாரும் சேர்ந்து விளக்கமாருல அடிச்சாலும் வாங்கிக்குவாரு... ".

ஆனா அதுக்கு ஒத்துக்காம கருப்பையா மறுத்துட்டு வீட்டுக்கு வந்தார். அப்போ பாண்டிகிட்ட " டே.. ஏண்டா அப்படி சொன்ன அவர்கிட்ட ... " னு கேட்டார்.

" நீங்க பத்தாயிரம் எடுத்தா எந்த மானம் போகுமோ அதே தான் போகும். அபராதம் தான் கூடக் குறைய இருக்கும். அம்பதாயிரம் சேர்த்து வேற தறேன் சொல்றாரு. நீங்க தான் பொழைக்க தெரிஞ்சவராச்சே !" என்றான்.

" அதையே ஏண்டா திரும்ப திரும்ப சொல்ற. அடகப்பா.. தலைக்கு வந்த அம்பு தலைப்பாவோட போச்சு." என்று பெருமூச்சு.

" நீங்க பணம் எடுத்தது தெரிஞ்சா மொத்த திருட்டும் உங்க மேல வந்துரும். பாத்து சூதானமா இருந்துக்குங்க"